
மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் புறநகர் மாவட்ட செயலாளர் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் அவருடன் அதிமுகவைச் சேர்ந்த அவனியாபுரம் மேற்குப் பகுதி செயலாளர் கருணாநிதி இலக்கிய அணி தலைவர் ரகுராமன் துணைத்தலைவர் யோகேஷ் உள்ளிட்ட சுமார் 100 பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் மதுரை விமான நிலையத்தில் திமுகவில் இணைந்தனர்.
1996 ம் ஆண்டு திமுக சார்பில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் முத்துராமலிங்கம். இவர் முக.அழகிரியின் தீவிர ஆதரவாளராக அவரது வீட்டில் வேலை பார்த்து வந்தவர். அழகிரி தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் சிக்கிய போது இவர் தான் முக்கிய சாட்சியாக இருந்தார். அதன் பிறகு அதிமுக தன்னை இணைத்துக்கொண்டு அதிமுக சார்பில் திருமங்கலம் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கி எம்.எல்.ஏ வாக்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதன் பிறகு அதிமுக கட்சி பதவி தேடி வந்தது.
மதுரை புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆனார்.தென்மாவட்டஎம்.எல்.ஏக்களில் ஓ.பி.எஸ்க்கு தீவிர ஆதரவாளராக மாறினார். அவரும், இவருக்கு முழு சப்போர்ட்டாக இருந்து வந்தார்.ஜெ. மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ் தொடங்கிய தர்மயுத்தம் நிகழ்ச்சியில் முழுமையாக தன்னை இணைத்துக்கொண்டு இயங்கி வந்தார். இந்த சட்டமன்ற தேர்தலில் இவருக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தாய் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.