செய்திகள்

90 சதவீதம் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் | மதுரையில் ஜான் பாண்டியன் பேச்சு

90 percent of AIADMK workers are Edappadi Palaniswami Page | John Pandian speech in Madurai

மதுரையில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது : 90 சதவீதம் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பின்னாடி தான் நிற்கிறார்கள் இதனால் ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றது தவறானது என்றார்.

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் நாங்கள் நீண்ட நாட்களாக கூறிவரும் ஒரு கோரிக்கையாக உள்ளது. வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

கூட்டணி என்பது தேர்தலுக்கு முன்பாக எடுக்கும் நிலைப்பாடு. அதை அப்போது பார்ப்போம். அதிமுக அமைச்சராக இருந்தாலும், திமுக அமைச்சராக இருந்தாலும், எந்த அமைச்சர்களாக இருந்தாலும், அவர் கார் மீது செருப்பறிவது குற்றம் தான். இதை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கின்றது என்று தெரிவித்தார்.

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: