கலெக்டர்செய்திகள்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயார் செய்யப்பட்ட தேசியக் கொடியினை ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மதுரை கலெக்டர் வழங்கினார்

On the occasion of 75th Independence Day, Madurai Collector presented the National Flag prepared by Women Self Help Groups to Panchayat Council Leaders.

மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 75-வது சுதந்திர திருநாளை முன்னிட்டு (08.08.2022) மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்ட தேசியக் கொடியினை ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:- ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரத் திருநாளை வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் 75-வது சுதந்திரத் திருநாளான ஆகஸ்ட் 15-ஆம் நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு தமிழக அரசின் சார்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

75-வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக முன்னேற்பாடு பணிகளை அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்.

முதற்கட்டமாக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்ட தேசியக் கொடியினை அனைத்து ஊராட்சிகளுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 75-வது சுதந்திரத் திருநாளன்று தேசிய கொடியை ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் அலுவலகங்களில் ஏற்றி மரியாதை செலுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் வீடுதோறும் தேசியக் கொடியினை ஏற்றுவதற்கும், எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விழிப்புணர்வினையும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு தேவையான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாட்கள் வேலைத் திட்டத்தினை அனைத்து நாட்களிலும் கிராம மக்கள் பணிபுரியும் வகையில் பணிகளைப் பிரித்து வழங்க வேண்டும்.

அரசின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டப்பணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் தங்கள் ஊராட்சிகளில் செயல்படுத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்ட தேசியக் கொடியினையினையும், பொதுமக்களுக்கு தேசிய கொடி பற்றிய விழிப்புணர்வு விளக்க துண்டு பிரசுரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மாவட்ட திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) எம்.காளிதாஸ் மற்றும் அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: