
மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் இன்று (10.08. 22) முதல் (23.08.22) தேதி வரை 12 நாட்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் வரும் பார்வையாளர்கள் பயணிகள் ஆகியோர் கடும் சோதனைக்கு பின்னரே விமான நிலைய வெளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் . மேலும் விமான நிலையத்தில் அமரும் பயணிகளின் உடமைகள் மோப்ப நாய்கள் ,வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களை கொண்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.
பயணிகள் மட்டுமே இன்று முதல் விமான நிலையத்திற்குள் அனுமதி. பார்வையாளர்கள் இன்று முதல் (10.08.22) வரும் 22.08.22 வரை 13 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்திற்குள் அனுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆபத்து காலங்களில் உடனடி மீட்பு பணிக்கு அதிவிரைவு அதிரடிப்படை (QRT) தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.