
மதுரை மாவட்டம் மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜியக்கொடி (வயது 55) இவரது மனைவி தேன்மொழி. ராஜியக் கொடி பிஎஸ்சி பட்டம் முடித்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மருத்துவ பிரிவிற்கான நுழைவுத் தேர்வில் எழுதி வெற்றி பெற இயலாத நிலையில், தற்போது தனது மகன்களுடன் நீட் தேர்வு எழுத வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
55 வயதான ராஜ்யக்கொடி மகன் மற்றும் மருமகள் பேத்தியுடன் வந்து நீட் தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு வந்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார். 1985 ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில்தேர்ச்சி பெற இயலவில்லை. இந்நிலையில் தற்பொழுது நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, மதுரை வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுத வந்தார்.
அவரை வழி அனுப்ப ராஜ்யக்கொடியின் மனைவி தேன்மொழி, முதல் மகன் சக்தி பெருமாள் மருமகள், வீர நாச்சியார் மற்றும் பேத்தி விஜய் சிம்மா ஆகியோருடன் நீட் தேர்வு மையத்தில் குடும்பத்தினர் வந்து உற்சாகப்படுத்தினர்.
ராஜ்ஜியக்கொடி இளைய மகன் வாசுதேவன் கடலூர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நீட் தேர்வினால் மாணவர்கள் பல்வேறு சர்ச்சைகள் குழப்பங்களுக்கு இடையில் 55 வயதான ராஜ்யக்கொடி தேர்வு எழுத வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.