செய்திகள்

48 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை கட்டாயம்: வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

Corona examination is mandatory before 48 hours

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மே 2-ம் தேதி அன்று பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக்கூடாது.

மேலும் வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்க வேண்டும். வேட்பாளர்களின் முகவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பாக கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அதனை அடுத்து வாக்கு எண்ணும் மையத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பல கட்டுப்படுகளை அறிவித்துள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: