ஆன்மீகம்இந்துமதுரை வரலாறுவீடியோ

48 ஆண்டுகள் பூட்டிக்கிடந்த மீனாட்சி அம்மன் கோவில்

Meenakshi Amman Temple

48 ஆண்டுகள் பூட்டிக்கிடந்த மீனாட்சி அம்மன் கோவில்

பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தான்.வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள். இப்படியாக துவங்கியதுதான் கல்திரை.

கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.
இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள்.

தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள். சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள். வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான்.

பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான். அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது. அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள்.

அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.அப்போது தள்ளாத வயதான ஒருசிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள். இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர்.

முழுமையாக தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோவை காணுங்கள்… கேளுங்கள்…

Show More

Leave a Reply

Your email address will not be published.

4 × 4 =

Related Articles

Close