
மதுரை மாவட்டம் பறவை அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த தனசேகரன்(23) மற்றும் கண்ணன்(20). இருவரும் நேற்று மாலை வைகை ஆற்றை ஒட்டியுள்ள முத்தையா கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு குளிக்க சென்றுள்ளார்கள், இவர்களுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் ஆழமான பகுதிகளுக்குள் சென்று மாயமானார்கள்.
இது குறித்து உறவினர்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பொறுப்பு உதயகுமார் மற்றும் மோட்டார் வாகன அலுவலர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் நேற்று இரவு 7 மணி வரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு அலுவலர் பாண்டி உத்தரவின் பேரில், கூடுதலாக சிறப்பு கமாண்டோ படையினர் மற்றும் ரப்பர் படகுகள் மூலம் காலை 6 மணி முதல் தேடும் பணியானது நடைபெற்றது.
சிறப்பு கமாண்டோ படை வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியாளர் அனீஸ் சேகர் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இதுபோன்று வருங்காலங்களில் நடக்காமல் இருப்பது குறித்தும் எச்சரிக்கை பலகையில் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு வழிமுறைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சுமார் பத்து மணி நேர தேடுதலுக்கு பிறகு மாலை 5 மணி அளவில் இருவர்களின் உடலும் மீட்கப்பட்டது. சடலத்தை சமயநல்லூர் வட்டாட்சியர் மற்றும் சமயநல்லூர் காவல் சார்பு ஆய்வாளர் தியாகராஜன் வசம் உடன்களை தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.
பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இவர்கள் உடர்களையும் அனுப்பி வைத்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வைகை ஆற்றில் ஐந்து பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஒருவர் யார் என அடையாளம் காணப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் மோட்டார் வாகன நிலைய அலுவலர் கண்ணன் கூறுகையில், ஆற்றில் நீர் அதிகம் செல்லும் பொழுது ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் இருப்பது நல்லது. நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் உயிரிழக்கும் சிலர் மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுப்பணை பகுதிக்கு சென்று சிக்கிக் கொள்கிறார்கள்.
மழைக்காலங்களில் நீர்நிலைப் பகுதிகளுக்கு குழந்தைகளையோ பொதுமக்களோ செல்லாமல் இருப்பது நல்லது என இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.