செய்திகள்

2021ஆம்‌ ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன்‌ விருது | மதுரை கலெக்டர் அறிவிப்பு | ரூ.1 லட்சம் பரிசு

Tamil Nadu Green Champion 2021 Rs 1 lakh award; Madurai Collector Notice

தமிழக அரசின்‌ சுற்றுச்சூழல்‌ காலநிலை மாற்றம்‌ மற்றும்‌ வனத்துறை, சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு மற்றும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பொருட்டு தங்களை முழுமையாக அர்பணித்தவர்களுக்கு பசுமை சாம்பியன்‌ விருது வழங்குவதற்கு மதுரை மாவட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியரால்‌ விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்‌ அடிப்படையில்‌ மதுரை மாவட்டத்தில்‌ பசுமை சாம்பியன்‌ விருதுக்கு மதுரை
மாவட்டத்தில்‌ தனிநபர்கள்‌, கல்வி நிறுவனம்‌, அமைப்புகள்‌ மற்றும்‌ தொழிற்சாலைகளிடமிருந்து மொத்தம்‌ 12 விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டது.

மதுரை மாவட்டத்தில்‌ பசுமை சாம்பியன்‌ விருது தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ தலைமையில்‌ அமைக்கப்பட்ட தேர்வு குழுவின்‌ கூட்டம்‌ 05.05.2022 அன்று மாவட்டஆட்சியர்‌ தலைமையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ பசுமை சாம்பியன்‌ விருதுக்கு விண்ணப்பித்தவர்கள்‌ சுற்றுச்சூழல்‌ பங்களிப்பில்‌ தாங்கள்‌ மேற்கொண்ட பணிகளை தேர்வுக்குழு முன்பாக எடுத்துரைத்தனர்‌.

மதுரை மாவட்டத்தில்‌ பசுமை சாம்பியன்‌ விருதுக்கு விண்ணப்பித்தவர்களில்‌ கீழ்க்கண்டவர்கள்‌ குழுவால்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளனர்‌.

1. ஏ.துரைராஜ்‌, திருப்பரங்குன்றம்‌, மதுரை.

2. கொட்டாம்பட்டி வட்டார வயலக கூட்டமைப்பு, வைரவன்பட்டி, மேலூர்‌, மதுரை மாவட்டம்.‌

3. டிவிஎஸ்‌ ஸ்ரீ சக்ரா லிமிடெட்‌, வெள்ளரிப்பட்டி, மேலூர்‌, மதுரை மாவட்டம்‌.

மதுரை மாவட்டத்தில்‌ பசுமை சாம்பியன்‌ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உலக
சுற்றுச்சூழல்‌ தின விழா ஜீன்‌ 5 அன்று பரிசு தலா ரூபாய்‌ ஒரு லட்சம்‌ வீதம்‌ பணம்‌ முடிப்பும்‌,
சான்றிதமும்‌ மாவட்ட நிர்வாகத்தால்‌ வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள ஏ.துரைராஜ்‌, திருப்பரங்குன்றம்‌, மதுரை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
7
+1
0
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: