+2 தேர்வில் 3 பாடத்தில் 100 / 100 | இரு கைகளை இழந்த திருப்பரங்குன்றம் மாணவி சாதனை
100/100 in 3 subjects in +2 exam | Thiruparankundram Disabled Student Achievement

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் குளம் கிராமம் திருமால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி, இவரது கணவர் சந்திரன் இறந்து 18 வருடங்கள் வருகிறது. இவருக்கு. திருமலைவாசன் (வயது 20) B.Com படித்து வருகிறார் மகள் சக்தி ஜான்ஸிராணி(வயது 18) மதுரை மாநகராட்சி ஈவெரா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி பயன்பாட்டு பிரிவில் வணிகவியல் கணக்குப்பதிவியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய மூன்று பிரிவுநூற்றுக்கு நூறு சதம் எடுத்த சாதனை மாணவி சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் தாயாரின் பராமரிப்பில் இரண்டு கைகளும் செயல்பட முடியாத மாற்றுத்திறனாளியான இவர் பத்தாம் வகுப்பில் கடந்த 2020ல் 477 மதிப்பெற்றவர்.
சாதனை மாணவி சக்தி ஜான்சிராணி குறிப்பிடுகையில் சிறுவயதிலேயே தந்தையை இழந்த நான் எனது தாயாரின் பராமரிப்பில் வளர்ந்துவலையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 477 மதிப்பெண்களும், மதுரை ஈவேரா நாகம்மையார் மாநகராட்சி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு கணினி பயன்பாட்டு பிரிவில் 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் இடம் பெற்றவன் என்பதில் பெருமை அடைகிறேன் எனக்கு கலெக்டர் ஆவதே லட்சியம் அதற்காக சிறு வயது முதலே என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன். கலெக்டர் ஆக மதுரையில் பணிபுரிய எனது லட்சியம் என குறிப்பிட்டார்.
இதுகுறித்து தாயார் கல்யாணி கூறுகையில், சக்தி ஜான்சிராணி கருவுற்றிருக்கும் போதே எனது கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் இரண்டு கைகளும் செயல்படாத மாற்றுதிறனாளி சிறுமியை அனைவரும் ஏற்க மறுத்தனர். என்னை மறுமணம் செய்ய கூறியும் நான் மறுத்து என் குழந்தைகளை நன்றாக வளர்தத்தில் என்னை பெருமையடைய செய்ததற்கு நன்றி. என கூறினார்.