செய்திகள்

தமிழ்நாடு அப்பள சங்க செயற்குழு கூட்டம்; மாநிலத்‌தலைவர்‌ திருமுருகனின்‌ மனைவி ராதா ஜெயலட்சுமிக்கு அஞ்சலி

Madurai Appalam News

தமிழ்நாடு அப்பளம்‌, வடகம்‌, மோர்‌, வத்தல்‌ சங்கத்தின்‌ செயற்குழு கூட்டம்‌ காணொலிக்‌ காட்சி மூலமாக மாநில செயலாளர்‌ விஜிஸ்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இந்த கூட்‌டத்தில்கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாநிலத்‌தலைவர்‌ திருமுருகனின்‌ மனைவி ராதா ஜெயலட்சுமிக்குசங்கத்தின்‌ சார்பாக அஞ்சலி செலுத்தப்‌பட்டது.

இதைத்‌ தொடர்ந்து, ராதா ஜெயலட்சுமி மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்‌ என்பதால்‌ அவருக்கு சேர வேண்டிய பணம்‌ உடனடியாக கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்‌, அவரது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்‌ என்பது உள்பட முக்கிய தீர்மானங்கள்‌ நிறை வேற்றப்பட்டன.

மேலும்‌ ராதா ஜெயலட்சுமி பெயரில்‌ புதிய அறக்கட்டளை நிறுவப்பட்டு உள்ளதாகவும்‌, அறக்‌கட்டளை சார்பில்‌ 6-ந்‌ தேதி அனுப்பானடி டீச்சர்ஸ்‌ காலனி பகுதியில்‌ ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம்‌ வழங்க ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு உள்ளதாகவும்‌ சங்க மாநிலத்‌ தலைவர்‌ திருமுருகன்‌ தெரிவித்தார்‌.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
33
+1
0
+1
0
+1
59
+1
0
Share Now
Back to top button
error: