
மதுரை ஹார்விபட்டி இந்திரா நகரில் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தனுஷ்கோடி இவர் மதுரை கூடல் நகர் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் இல்லத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்பொழுது முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்லும் பொழுது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதமாக இவரது இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இதில் நிலை குலைந்த தனுஷ்கோடி லாரி சக்கரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் தகவல் அறிந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
2
+1