செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி; ஜூலை 31ம் தேதி வரை அனுமதி

Oxygen production at the Sterlite plant; Permission until July 31st

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நிபந்தனைகளுடன் மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று அனுமதி அளித்திருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்றும், ஆக்சிஜன் தயாரிக்க பிறப்பித்த உத்தரவு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்றும், அதன் பிறகு, அப்போதைய சூழலைப் பொறுத்து, தேவைப்பட்டால் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now
Back to top button
error: