வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45-ஆவது பிறந்தநாள் | கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்
45th Birthday of Waikai Express | The passengers celebrated by cutting the cake

இந்திய நாடு முழுவதும் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டுமக்கள் தத்தம் வீடுகளில் கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதராமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ்ன் 45-ஆவது பிறந்தநாளைக் ரயில் பயணிகள் கேக் வெட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும், ரயில் ஓட்டுனருக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
கடந்த 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை மற்றும் மதுரைக்குச் செல்லும் பகல் நேர விரைவு ரயிலாக உள்ள இந்த ரயில் தென் மாவட்ட வணிகர்கள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
குறிப்பாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜ்ல் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு உண்டு.
நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறு மார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும்.