
மதுரை செல்லூர் சர்வீஸ் சாலை வடக்கு வைகை ஆற்றுப்பகுதியில் தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள வைகை ஆறு பகுதியில் சுமார் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் மிதப்பதாக செல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு தெரிந்த காவல் உதவி ஆய்வாளர் ஜான் சம்பவ இடத்துக்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என இவரது புகைப்படத்தை வைத்து அருகில் உள்ள விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி தண்ணீரில் விழுந்தாரா ? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திலையோ அல்லது மதுரை செல்லூர் காவல் உதவி ஆய்வாளர் ஜான் அவர்களிடம் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு +91 83000 17684 இவரைப் பற்றி தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.