வேளாண் இயந்திரங்கள் & சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மதுரையில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
Eligible candidates are invited to apply for setting up of Maintenance Center for Agricultural Machinery & Solar Pump Sets Repair Maintenance Center

தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், தேசிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் “வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்” மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்ட 1 எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும்.
கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி இளைஞர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படடுகின்றன.
தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.
இம்மையங்கள் ரூ.8.00 இலட்சம் செலவில்அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய இடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண்மைப் பொறியியல் துறையின் மதுரை மற்றும் உசிலம்பட்டி உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்ததை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும்.
மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ) அவர்களால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்தத் தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.
பின்னர் சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) மையத்தினை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகையினை பயனாளியின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.
மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் (வே.பொ)களை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.