கலெக்டர்செய்திகள்

வேளாண் இயந்திரங்கள் & சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் | பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைப்பதற்கு அரசு மானியம் | மதுரை கலெக்டர் தகவல்

Agricultural Machinery & Solar Pump Sets | Government subsidy for setting up a repair and maintenance center | Madurai Collector Information

தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் “வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்” மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்திற்கு 1 எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.

தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ.8.00 இலட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்.

மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண்மைப் பொறியியல் துறையின் மதுரை மற்றும் உசிலம்பட்டி உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும். மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் (வே.பொ)-ளை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: