செய்திகள்

வேலை வாய்ப்பு பதிவினை ஆன்லைனில் புதுப்பிப்பிக்கும் அறிவிப்பு

Government Job

2017, 2018 மற்றும்‌ 2019 ஆகிய ஆண்டுகளில்‌ வேலைவாய்ப்பு அலுவலகப்‌ பதிவினை பல்வேறு காரணங்களினால்‌ புதுப்பிக்கத்‌ தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பினை பெறும்‌ வகையில்‌ மீண்டும்‌ ஒருமுறை புதுப்பித்துக்‌ கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல்‌ சலுகை தமிழகஅரசின்‌ அரசாணை) எண்‌.204, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌துறை. நாள்‌ 28.05.2021-ன்‌ வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

ஆரசாணையில்‌ தெரிவித்தவாறு இச்சலுகையைப்‌ பெறவிரும்பும்‌ பதிவுதாரர்கள்‌ இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.05.2021 முதல்‌ மூன்று மாதங்களுக்குள்‌ அதாவது 27.08.2021 -க்குள்‌ இணையம்‌ வாயிலாக தங்கள்‌ பதிவினைப்‌ புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌. அவ்வாறு இணையம்‌ வாயிலாக பதிவினைப்‌ புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிக்குள்‌ சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல்‌ மூலமாக விண்ணப்பம்‌ அளித்தும்‌ புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌.

இணையம்‌மூலமாக புதுப்பித்தல்‌ மேற்கொள்ளும்‌ பொழுது வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்‌ துறையின்‌ http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 27.08.2021 வரை பதிவுதாரர்கள்‌ தங்களது பதிவினை புதுப்பித்துக்‌ கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை மதுரை, மாவட்ட ஆட்சியர்‌ டாக்டர் அனீஸ்‌ சேகர்‌ தெரிவித்துள்ளார்‌.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: