#வேட்டைநாய் #இனப்பெருக்கம் #Nativedog
எந்த ஒரு புதிய முயற்சியும், புதியது அல்ல. அது ஏற்கனவே இருந்துள்ள ஒன்றிலிருந்தே தோன்றியது என்பதை மட்டும் நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த வீடியோவில் நாட்டு நாய்கள் குறித்த தனது பதின் வயது தேடலின் வழிகளில் தோன்றிய தனது அனுபவங்கள் மற்றும் வளர்ப்பு முறையில் அவற்றின் வாயிலாக பெற்றுத் தந்த கூடுதல் அனுபவங்கள் மற்றும் தனது முந்தைய தலைமுறையிடமிருந்து செவி வழியாக அறிந்த விசயங்கள், புத்தக வாயிலாக கற்ற கல்வி என அனைத்தையும் ஒரு சேர்த்து, இது, தான் தேர்ந்தெடுத்த இனக் பெருக்க பாதை என்று கூறியுள்ளார்.
ஆதலால் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இது அவர் பெற்ற அனுபவங்களின் ஊடே பயணிக்கும் இனப்பெருக்க பாதை என்பதை நீங்கள் மீண்டும் ஒரு முறை உங்கள் நினைவுக்குள் புகுத்திக் கொள்வது நன்று. மீண்டும் வேறு ஒரு தேடுதலில் சந்திப்போம். இரா.சிவசித்து வீடியோ தொடரும்…
நன்றி !! வணக்கம் !!
பயண அனுபவம்
~~~~~~~~~~~~~~
இந்த முறை கேமரா தம்பி வர இயலாத காரணத்தால் நான் மட்டுமே தனித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலையில், இரயில் பயணத்தை தேர்ந்தெடுத்தேன். காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்த ரயில் பயணம் 9 மணிக்கு ராஜபாளையத்தில் முடிவடைந்தது. அதன் பின்பாக அங்கிருந்து வாசுதேவ நல்லூருக்கு பேருந்தில் வந்துசேர்ந்தேன். தனியார் பேருந்து என்பதால், உயிரை கையில் பிடித்துதான் வந்தேன்.
இந்த முறை சகோதரர் சிவசித்து அவர்களின் தந்தை அவர்கள் என்னை பிக்கப் செய்ய வந்தார்கள். மகன் மீது அவருக்கு இருக்கும் பாசமும், நம்பிக்கையும் ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒருவருடைய வெற்றிக்கு அவரது குடும்பம் எவ்வளவு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்கு சிவசித்து அப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மிகப் பெரிய எடுத்துக்காட்டு.
பண்ணைக்கு உள்ளே நுழைந்ததும் தங்கபாண்டியும், கருமாண்டியும் தங்கள் கால்களை என் தோளில் போட்டு வரவேற்றனர். அப்படி ஒரு மகிழ்ச்சி அவர்கள் என்னை காண்பதில். இப்பேரன்பு வேறு எமக்கு எங்கு கிட்டும். நான் எதுவும் இந்த முறை வாங்கிச் செல்லவில்லை. ஏனெனில் வெளி நபர்கள் திண்பண்டங்கள் கொண்டு வருவதை சிவசித்து பெரிதும் விரும்பமாட்டார் என்பதனால்.
இந்த முறை தம்பி கேமராமேன் இல்லை. கொஞ்சம் பதட்டம். இரு வேளை சேர்த்து செய்ய வேண்டிய கட்டாயம். கூடுதலாக நான் சென்ற நேரத்தில் கரன்ட்டும் இல்லை. பேட்டரி சார்ஜ்க்கு வழி இல்லை. இதை எல்லாம் எண்ணத்தில் வைத்துக் கொண்டு, பேட்டியை துவங்கி அப்பாடி என்று முடித்தால், பேசிய பேட்டியில் சப்தம் மட்டும் வரவில்லை. வெறும் காத்துதான் வந்தது. சட்டையில் மாட்டியிருந்த மைக் தனியாக தொங்கியது. நான் சிவசித்துவை பார்க்க… அவர் என்னை பார்க்க… கொஞ்சம் நிசப்தம். நான் கேமரா தம்பியை நினைத்தேன்.
சரி, என்று முடிவு செய்து, சிவசித்து மீண்டும் அதே உற்சாகத்துடன் பேசி முடித்தார். அதுதான் இந்த பேட்டி. இரண்டு முறை பதிவு செய்யப்பட்டது. அதற்கு பின்பாக இரண்டு பேட்டி பதிவு செய்தேன். இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் கேமரா தம்பி முன்பு எடுத்தது.
~~~~~~~~~~~~~~
முந்தைய வீடியோ இணைப்புகள்
1 வது வீடியோ லிங்க்
கன்னி நாய் காதலன் | நாட்டு நாய் வளர்ப்பு | பகுதி 01
2 வது வீடியோ லிங்க்
சிப்பிப்பாறை நாய்களில் மயிலை நிறம் | பகுதி 02
3 வது வீடியோ லிங்க்
சிப்பிப்பாறை நாய்களில் சாம்பை நிறம் | பகுதி 03
4 வது வீடியோ லிங்க்
ஒத்த குறுக்கு இரட்டை குறுக்கு | இரா.சிவசித்து | பகுதி 04
5 வது வீடியோ லிங்க்
குட்டிநாய் தேர்வு | வளர்ப்பு A To Z | பகுதி 05
6 வது வீடியோ லிங்க்
ராஜ மடி காது | வேட்டை நாய்களின் காது வகைகள் | பகுதி 06
7 வது வீடியோ லிங்க்
நாட்டு நாய் குட்டிக்கு ஏன் இவ்வளவு விலை | வியாபாரமும் விமர்சனமும்
8 வது வீடியோ லிங்க்
கிளாசிக் கன்னி நாய்கள் | கன்னி நாய் கட்டுக் கதை
9 வது வீடியோ லிங்க்
வீட்டில் வேட்டை நாய் வளர்க்கலாமா ?
10 வது வீடியோ லிங்க்
நாய் உயரம் வரமா ? சாபமா ?
11 வது வீடியோ லிங்க்
வேட்டை நாய் இன வழி வரலாறு | History of the hunting dog breed
இரா.சிவசித்து தொடர்பு எண்: 📞 81223 32271 📞 63804 78387
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
Hello Madurai Raj – 📞 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: https://play.google.com/store/apps/de…
💓Online Web Tv : https://hellomaduraitv.com/
💓 Facebook :https://www.facebook.com/hellomaduraitv
💓 Hello Madurai News website : https://hellomadurai.in/
💓 Agri News website : https://tamilvivasayam.com/
💓 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________