வீரபாண்டி & பூதகுடி ஆகிய ஊராட்சிகளில் புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியினை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்
Hello Madurai News

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி மற்றும் பூதகுடி ஆகிய ஊராட்சிகளில் புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்து தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படாத நடவடிக்கைகள், மக்களின் தேவைகள் அறிந்து 30 நாட்களில் நிறைவேற்றி வருகின்றார்கள்.
இன்று கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி கிராமம் மற்றும் பு+தகுடி ஆகிய கிராமங்களில் 110 முஏயு விநியோக மின்மாற்றி அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் சின்னப்பட்டி, குலமங்கலம், வீரபாண்டி மற்றும் பு+தக்குடி ஆகிய நான்கு ஊராட்சிகளில் மக்களின் தேவைகள் அறிந்து கூடுதலாக மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மின்மாற்றி அமைக்கும் பணி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்களில் பணி முடிக்கப்பட்டுள்ளது.
மக்களின் தேவையை உடனடியாக நிறைவேற்றி தீர்வு காணக்கூடிய அரசாக தமிழக அரசு திகழ்கிறது. அனைத்து பணிகளும் மனநிறைவோடும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவுகிணங்க மதுரை மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கொரோன தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் கொரோனா நோய் தொற்றுகளினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை மிகவம் குறைந்துள்ளது.
கிராமபுறங்களில் சுமார் 4,000 பேருக்கு மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் வீடுவீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் முகாமில் மூன்றாம் முறையாக ஈடுபடுத்தபட்டுள்ளனர். மிக விரைவில் மதுரை மாவட்டம கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், எஸ்.அனீஸ் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மண்டல தலைமை பொறியாளர் (மின்சாரம்) பி.பாஸ்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை, மேற்பார்வை பொறியாளர், ஜா.பிரிடா பத்மி, செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.