செய்திகள்மதுரை

வீட்டுமனை வேண்டுவோரிடமிருந்து மனுக்களை பெறும் முகாம்

மதுரை மாவட்டம், தெற்கு வட்டம் சோலைஅழகுப்புரத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வீட்டுமனை வேண்டுவோரிடமிருந்து மனுக்களை பெறும் முகாமில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன்,தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு பொதுமக்களிடமிருந்து இன்று(02.03.2020) மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணகி, வட்டாட்சியர்கள் அனீஸ்சர்தார்(மதுரை தெற்கு),சேமசந்திர சீனிவாசன்(தெற்கு சமூக பாதுகாப்புத்திட்டம்), மாநகராட்சி நகரப் பொறியாளர் அரசு, மாநகராட்சி உதவி ஆணையாளர் பழனிசாமி, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், மதுரை பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணையத் தலைவர் ஜெ.ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

20 − twelve =

Related Articles

Close