
விளாச்சேரி சேவுகர்தெரு சுப்பையா மகன் மருதுபாண்டி 27. இவர் விளாச்சேரி ராயப்பன் நகர் ரோடு சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்த மாநகராட்சிலாரி மீது மோதி விபத்தானது.
இதில் தூக்கி வீசப்பட்ட மருதுபாண்டிக்கு தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தந்தை சுப்பையா போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1