அமைச்சர்செய்திகள்

விரைவில் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் | வருவாய்துறை அமைச்சர்

Soon Madurai Airport will be upgraded as an international airport Revenue Minister

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த வருவாய் துறை அமைச்சர் K.K.S.S.R.ராமசந்திரன் மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது; கடந்த சில நாட்களாக இரண்டு லட்சம் கனஅடியாக இருந்த காவேரி உபரி நீர் தற்பொழுது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சை, மயிலாடுதுறை ,கரூர், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 4035 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அரசு சார்பில் உரிய வசதிகள் செய்து தரப்படுகிறது.

காவிரி ஆறு செல்லும் மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு வெள்ளம் மற்றும் மீட்பு பணியிணை பார்வையிட்டு கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் குறித்த கேள்விக்கு

அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது நோக்கம். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. சில இடங்களில் பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆதலால் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படாத வகையில் முதல்வரின் வழிகாட்டுதலின்படி அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்த கேள்விக்கு

மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் கோரிக்கை – அதை நிறைவேற்றும் பொருட்டு உரிய பணிகளை செயல்படுத்தி வருகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: