ஆன்மீகம்செய்திகள்

விருஷ்ணி (யாதவ/ஆயர்) குல பாண்டியர்கள்

Vrishni (Yadava / Aayar) clan Pandyas

மூவேந்தரில் மூத்தவரான பாண்டியனின் முதல் பாண்டியன் வடிவம்பலநின்ற பாண்டியன்

நெடியோன் என்னும் அரசன் பஃறுளி ஆற்றோடு தொடர்புடையவராகவும்,நிலந்தருதிருஷன் நெடியோன் என்று நிலப்பரப்பினைத் தன்நாட்டோடு சேர்த்துக் கொண்டவராகக் காட்டப்படுவதால் இந்த அரசனை வடிவம்பல நின்ற பாண்டியன் என்று கருதுகின்றனர்.

பிற்காலத் தமிழ்நூல் ஒன்று இவரை ஆழி வடிவு அலம்ப நின்றான் என்று குறிப்பிடுகிறது.இந்நூல் இவரை “யாதவகுல அரசன்” என்றும்,ஏழிசை நூல் சங்கத் தலைவன் என்றும், தேவர்களுக்காகத் தூது சென்றவன் என்றும்,பாரதப் போரில் கலந்து கொண்டவன் என்றும் குறிப்பிடுகிறது.

பாண்டிய மன்னர்கள் பற்றி செப்பேடு கூறும் வரலாறு:

நிலவிலிருந்து வரும் வெண்மையான ஒளி உலகத்தை இன்பத்தில் ஆழ்த்துகிறது. பாண்டிய வம்சத்தால் சந்திரனின் களங்கமும் போய்விட்டது.

சந்திரனின் கதிர்கள் ஹிமாலய மலையிலும், மலைநாட்டின் மலையிலும் விழுந்ததால் இம்மலைகள் பாண்டிய அரசின் வெற்றித் தூண்களாக மாறியிருக்கின்றன. இந்த இரு மலைகளிலும் செதுக்கி வைக்கப்பட்டது போன்று இருக்கும் மலை முகடுகள் யானையின் தந்தங்கள் போன்று ஜொலிக்கின்றன.

பாண்டிய நாட்டைச் சுற்றியுள்ள கடல்களின் அலைகள் நுரையுடன் கரையைத் தொடுவது, பணிப்பெண்கள் தன் எஜமானனுக்கு வெள்ளைச் சாமரம் வீசுவது போல் உள்ளது.

பாண்டிய குலத்தில் பிறந்த அரசர்களுக்கு, தாமரைப் பூவில் பிறந்த லட்சுமி தன் கைகளாலேயே விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்தி கிரீடம் அமைத்து தந்துள்ளாள்.

பெரும் அஸ்வமேத யாகங்கள் செய்த முந்தைய பாண்டிய அரசர்கள் இப்போது உயிருடன் இல்லையென்றாலும் அவர்கள் நடத்திய பெரும் யாகங்களில் உண்டான, புகை மண்டலம் இன்றும் வானத்தை கருமேகமாக்கி வைத்துள்ளது. அந்த கருமேகங்கள் தான் அவ்வப்போது பாண்டி நாட்டைச் சுற்றியுள்ள நான்கு கடல்களிலிருந்தும் நீரைக் கவர்ந்து, மழையாக தேவையான காலங்களில் பொழிந்து பாண்டிய நாட்டை வளம் குறையாமல் பார்த்துக் கொள்கின்றன.

விருஷ்ணி குல(யாதவகுல) அரசர்களான இவர்களது புகழ் பாண்டிய நாட்டின் மங்காத முத்துக்கள் போன்று காலங்காலமாக ஒளிரட்டும்

ஆயர்குல அரசனாகிய வரகுணப்பாண்டியன் பற்றிய செப்பேட்டு தகவல்:

அரசன் வரகுணன் அடுத்தவர்களுக்கு உதவுவதை மகிழ்வோடு செய்பவன்.பக்தர்களின் நண்பன்,தூக்கத்தில் கனவுகண்டாலும் தனது குடிமக்களின் நன்மையை பற்றியே கனவு காண்பவன்.

அரசன் வரகுணப்பாண்டியன் தனக்கு பின்வரும் அரசர்களுக்கு கீழ்கண்ட வேண்டுகோளை வைக்கின்றான்.

பாண்டியபேரரசின் சிறப்புமிக்க வம்சாவழி உங்கள் காலத்தில் அழியக்கூடாது.

யாதவகுலத்தில் பிறந்த பாண்டிய அரசனாகிய நான் தலைவணங்கி எனக்குப் பின்வரும் அரசர்கள், நண்பர்கள் பக்தர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நிலதானம் செய்யப்பட்ட இந்த நிலத்தை மனைவியைப் போல நெருக்கமாக பாதுகாத்துக் கொள்வீர்களாக!

அடுத்தவர்களின் அபகரிப்பிற்கு இந்த நிலம் எந்த காலத்திலும் ஆட்படக்கூடாது.

ஓ ! மனிதர்களே ! நல்ல செயலை நோக்கி மனதைச் செலுத்துங்கள். இறப்பின் கடவுள், தனது வாயை அகலத் திறந்து வைத்துக்கொண்டு, உங்களை விழுங்க, உங்களுக்கு அருகிலேயே நடமாடிக் கொண்டுள்ளான். இந்த இறப்புக் கடவுளுக்கு நன்மை செய்ய அவனது தந்தையான காலதேவன், உங்களது வாழ்நாட்களை குறைக்க மிக வேகமாக நடைபோட்டு வருகிறான்.

அவன் உங்களைப் பிடிப்பதற்குள் நல்ல காரியங்கள் செய்யுங்கள். கெட்ட காரியங்கள் செய்துவிடாதீர்கள். நன்மையே நடக்கட்டும்.

ஆயர்குல அரசனாகிய ஶ்ரீவல்லபபாண்டியன் பற்றிய செப்பேட்டு தகவல்:

1. வாழ்க ! வளர்க ! ஸ்ரீ வல்லபன் என்று அழைக்கப்படும் இந்த அரசன் தனது புகழாலும், அன்பாலும் எதிரிகளை அழித்தவன்.

நந்தகோபர் அரசன் வழியிலும், யாதவ குலத்திலும் தோன்றியவன்

இப்பூவுலகத்தை எவ்வித தடையுமின்றி ஆண்டவன்.பல இளம் பிராமணர்கள் வேதம் கற்க இவ்வரசன் உதவுவதால் ஸ்ரீவல்லப அரசனது செல்வம் மேலும் மேலும் ஓங்கும்.

2. வாழ்க ! வளர்க ! யசோதா தாயால் வளர்க்கப்பட்டு, நந்தகோப அரசன் வழியிலும் யாதவ குலத்திலும் தோன்றி, லட்சக்கணக்கான பசுக் கூட்டத்தைப் பல்வேறு தொல்லைகளிலிருந்து காப்பாறியவன்.

பறவைகளுக்குள் சிறப்புமிக்க பறவையான கருடன் மீதுஅன்பைச் செலுத்தியவன்.தனது தலைவனான கிருஷ்ணபரமாத்மா மீது நெருங்கிய பக்தி கொண்டவன்

இக்குணங்களால் தான் பலி என்பவனை பாண்டிய அரசன் ஸ்ரீவல்லபன் வெல்ல முடிந்தது. ஸ்ரீவல்லபனின் செல்வாக்கு ஓங்கட்டும் !

– மதுரை கா.ராஜேஷ்கண்ணா

பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ருக்மணி பாமா சமேத மதனகோபாலகிருஷ்ணன் கோயில், இருந்தையூர் மதுரை (Rukmani Bhama MadhanaGopalaKrishnar Koyil built by PandiyanKings,Erunthaiyur,Madurai)

பாண்டிய சின்னம்.மாடுமேய்க்கும் சாட்டை கம்புடன் கூடிய இரட்டை மீன்கள்

சாட்டைகம்புடன் ஶ்ரீ கிருஷ்ணர்

 

அன்னை மீனாட்சியின் தாய்-தந்தையரான ஶ்ரீ மலையத்வஜபாண்டியன் – ஶ்ரீ காஞ்சனமலாதேவி
Parents of GoddessMeenakshiAmman Shree MalayathvajaPandiyan – Shree Kaanchanamaaladevi

“மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோனுக்குப் பெண்டாயினாள்”

பாண்டியராணி அன்னை மீனாட்சியையும்,கிருஷ்ணர் முதலாக பாண்டியமன்னர்களை ‘மாட்டுகோன்’ என்று காளமேக புலவர் பாடுகிறார்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மதுரை கா.ராஜேஷ்கண்ணா

விடுபட்ட, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்று தேடல்கள் நெடும் பயணம் என்றபோதும், அதை தொடர்ந்து செய்து வருகின்றேன். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கம். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: