செய்திகள்போலீஸ் | தீயணைப்புத்துறைரயில்வே | போக்குவரத்து

விமானத்தில் கோவா அழைத்துச் செல்வதாக மோசடி | மதுரை விமான நிலையத்தில் குவிந்த பயணிகளால் பரபரப்பு

Scam about traveling to Goa in flight | Madurai airport is crowded with passengers

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் கோவா அழைத்து செல்வதாக கூறி ஆன்லைன் மூலம் மோசடி செய்தது தெரியாமல் 50க்கும் மேற்பட்டோர்கள் மதுரை விமான நிலையத்தில் வந்தனர் விமான நிலைய ஊழியர்களிடம் தங்கள் கோவா செல்வதற்காக ஆன்லைன் மூலம் புக் செய்துள்ளோம் டிக்கெட் குறித்து விவரம் கேட்டனர்.

மதுரையில் இருந்து நேரடியாக கோவாவிற்கு எந்தவித வருமானமும் இல்லாத நிலையில் ஆன்லைன் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது மேலும் சிறப்பு விமானம் மூலம் பயணிகளை கோவா அழைத்துச் செல்வதாக கூறியதையடுத்து.

இதனை தொடர்ந்து கோவா செல்வதாக ஆன்லைன் மூலம் புக் செய்து ஏமாந்த பயணிகள் ஒவ்வொருவராக மதுரை 50 பேருக்குமேல் விமான நிலையத்தில் குவிந்தனர்.

மதுரையிலிருந்து நேரிடையாக கோவா செல்ல விமானம் எங்குள்ளது என விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என பல இடங்களில் கேட்டு அப்படி எதுவும் என தெரிந்ததும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

இதனை தொடர்ந்து விமான நிலைய புறப்பாடு பகுதியில் குவிந்தனர். இதனால் விமான நிலைய வளாகம் பரபரப்பா காணப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: