செய்திகள்போக்குவரத்து

விக்கிரமங்கலம், எலுவம்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்து படிக்கட்டு பழுது | பயணிகள் அச்சம்

Govt bus stairs repair to Vikramangalam, Eluvampatti | Passengers fear

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், பேருந்து ஓட்டுவதற்கு மிகவும் சிரமம் படுவதாகவும் ஆங்காங்கே போக்குவரத்துக் கழக பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரமங்கலம் அருகே உள்ள எலுவம்பட்டிக்கு செல்லும் 26ஆம் எண் கொண்ட அரசு பேருந்து படிக்கட்டு முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ளதால், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் மரண பீதியில் பயணம் செய்தது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை உருவாக்கியது.

மேலும், பேருந்தில் பயணம் செய்யும் போது, பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் ஏறும் போதும் இறங்கும் போதும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக நடத்துனர் ஒருவர் பொதுமக்களை எச்சரித்துக் கொண்டே வந்தது, பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களிடையே அரசு பஸ்ஸின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

இது குறித்து, சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் கேட்டபோது, கிளை மேலாளர் இடம் இது குறித்து தகவல் தெரிவித்தால் பேருந்து எப். சி.க்கு விடும்போது வேலை பார்த்துக் கொள்ளலாம், தற்போது எப்படியாவது அனுசரித்து ஓட்டுங்கள் என்று கூறுவதாகவும் இதனால், பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்திக்கு உள்ளாவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பஸ்ஸில் ஏறும் போதும் இறங்கும் போதும், அருகில் இருந்தவர்கள் எச்சரித்துக் கொண்டு வந்தது அங்கிருந்தவர்களை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியது.

இதுகுறித்து, அருகில் இருந்த நடத்துனர் கூறும் போது: ஆபத்தான நிலையில் உள்ள அரசு பேருந்துகளால் விபத்து ஏதும் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனரே பொறுப்பேற்க வேண்டும் என்றும், இரவு பனிமனையில் பேருந்தை நிறுத்தும்போது அலுவலக புத்தகத்தில் பேருந்து பழுது அடைந்த தகவலை எழுத்துப்பூர்வமாக எழுதி வைக்க வேண்டும் என்றும், தற்போது உள்ள மேலாளர்கள் இதை எழுதுவதற்கு அனுமதிப்பதில்லை என்றும் புலம்பியது அங்கிருந்தவர்களிடம் மன வேதனையை உண்டாக்கியது.

எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, படிக்களை சரி செய்து பயணிகளின் அசச்த்தை போக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: