
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. விக்கிரமங்கலம் பகுதியில், கோடைகாலத்தில் செய்யப்பட்ட நெல் அறுவடைகள் இதன் மூலம் அரசு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விவசாயிகளை பணம் கேட்டு, இடைத்தரகர்கள் மிரட்டுவதாக அந்தப் பகுதி விவசாயிகள் சார்பாக திமுக ஒன்றிய செயலாளர் சுகாதாரனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி முறைகேடுகள் நடைபெறா வண்ணம் அரசு அனுமதித்த விதிகளுக்கு உட்பட்டு கொள்முதல் நிலையம் செயல்பட வேண்டும், விவசாயிகளுக்கு ஆதரவாக விரைவில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்து வந்தார்.
அதன் பிறகு, முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த காரணத்தால், விக்கிரமங்கலம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் இடைத்தரகர்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார்.
இது குறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, புகார் மனு மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.