கலெக்டர்செய்திகள்புகார்

வாடிப்பட்டி அருகே செம்மணிபட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் அட்டை கம்பெனி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Public opposition to set up cardboard company on agricultural land in Chemmanipatti village near Vadipatti

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செம்மணி பட்டி கிராமத்தில், விவசாய நிலத்தில் அட்டைப் பெட்டி கம்பெனி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, செம்மினிபட்டி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் நான்கு முறை தீர்மானம் நிறைவேற்றியும், எந்தவித பலனும் இல்லையாம்.

இது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். ஆகையால், கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விவசாயவிளைநிலம் உள்ள பகுதியில் தனிநபர் அட்டைபெட்டி கம்பெனி தொடங்கியதை கண்டித்து, கிராம பொதுமக்கள் தொடர்ந்து கடந்த 6 மாதமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது சம்மந்தமாக பலமுறை மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ.,ஆகியோரிடம் மனுக்கள் கொடுத்துள்ளனர். மேலும், கடந்த 3 முறை கிராமசபைக் கூட்டங்களிலும் கம்பெனிதொடங்க அனுமதி மறுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபைக்கூட்டத்தில் பொதுமக்கள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று தர்ணாபோராட்டம் செய்தனர்.

அதன்பின் போலீஸ் பாதுகாப்போடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் முன்னிலையில், கூட்டம் நடத்தப்பட்டு அட்டைப்பெட்டி கம்பெனி தொடங்க 4வதுமுறையாகவும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இது குறித்து, கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்திட அனுமதிகோரி வாடிப்பட்டி காவல்நிலையம், சமயநல்லுர் துணைக் கண்காணிப்பாளரிடம் மனுக்கொடுத்தனர்.

மேலும், தொடர்ந்து வாடிப்பட்டி தாசில்தாரிடம் அட்டைப்பெட்டி கம்பெனிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி கடிதம் கொடுத்து இருந்தனர். ஆனால் இதுவரைக்கும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகையால், இது குறித்து ,தமிழக அரசு உடனே தலையிட்டு மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மாடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், செம்மணி பட்டி ஊராட்சியில், அட்டைப் பெட்டி கம்பெனி தொடங்கும் பட்சத்தில், கிராம பொதுமக்களை ஒன்று திரட்டி மதுரை- திண்டுக்கல் தேசிய நான்கு வழி சாலையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவும் தயாராக உள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: