செய்திகள்

வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகரின் கடையை சேதப்படுத்திய திமுகவினர் நீக்கம் ; தமிழக முதலமைச்சருக்கு குவியும் பாராட்டுக்கள்

Political News

மதுரை அருகே அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் தொடர்புடைய திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் அவர்களின் இந்த நடவடிக்கையை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க பிரமுகர் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொரோனா முழு ஊரடங்கால் இந்த பேக்கரி அடைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்தனர்.

அவர்கள் பேக்கரி முன் போடப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிகளை சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள். மேஜை, நாற்காலியை சேதப்படுத்தி ஆவேசமாக தூக்கி வீசினார்கள். மேலும், அந்த வளாகத்தில் இருந்த அரசு வங்கி ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார்கள்.

பின்னர் அந்த மர்ம நபர்கள் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகி வீடியோ வைரலாக பரவியது.

இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்த, வாடிப்பட்டி போலீசார் அங்கு விசாரணை நடத்தினார்கள்.  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினார்கள். அப்போது , இந்த அராஜகத்தில் ஈடுபட்ட 4 பேரும் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரின் அவரது ஆதரவாளர்கள் என தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் நெல் கொள்முதல் நிலையத்தில் மரியாதை கொடுப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட விரோதம் காரணமாக அசோக் பேக்கரியை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அசோக் உள்ளிட்ட 4 பேரைக் போலீசார் கைது செய்தனர்.

திமுக வாடிப்பட்டி பேரூர் செயலாளர்  தூண்டுதலின்பேரில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுளளார்.

இது தொடர்பாக அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான, துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் “மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பி.பிரகாசம், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் ” என க் கூறியுள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
27
+1
1
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: