கலெக்டர்செய்திகள்விருது | விழா | கூட்டம்

வாசித்தல் மாரத்தானில் மதுரை சாம்பியன்ஷிப் வெற்றி | கலெக்டர் கோப்பை வழங்கி கௌரவிப்பு

Winning the Madurai Championship in Reading Marathon | Honorary with presentation of collector's file

இல்லம்‌ தேடிக்கல்வி ஆய்வுக்கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ மரு.அனீஸ்‌ சேகர்‌ தலைமையில்‌ நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலர்‌ கா.கார்த்திகா, வரவேற்புரை ஆற்றினார்‌. கூடுதல்‌ ஆட்சியர்‌ செ.சரவணன்‌, மாவட்ட ஆட்சியர்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது) சி.மாறன்‌, இல்லம்‌ தேடிக்கல்வி மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்‌ கா.கணேசன்‌ ஆகியோர் முன்னிலை வகித்தனர்‌.

வாசித்தல்‌ மாரத்தானில்‌ மதுரை மாவட்டம்‌ சாம்பியன்ஷிப்‌ பட்டம்‌ வென்றதையடுத்து, அதற்கு உறுதுணையாயிருந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, மேற்பார்வையாளர்கள்‌ (பொ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌, ஆசிரியர்‌ ஒருங்கிணைப்பாளர்கள்‌ மற்றும்‌ தன்னார்வலர்கள்‌ ஆகியோருக்கு வெற்றிக்‌ கோப்பைகளை மாவட்ட ஆட்சியர்‌ வழங்கினார்‌.

23.03.2022 அன்று இராம்சந்திர மிஷன்‌ மூலம்‌ முதற்கட்டமாக 15 ஒன்றியங்களில்‌ உள்ள இல்லம்‌ தேடிக்கல்வி மாணவர்களுக்கு விதையுடன்‌ கூடிய விதைப்பைகள்‌ வழங்கப்பட்டது. அதனை வளர்த்து மரக்கன்றுகளாக பள்ளிகள்‌, ஊராட்சி மன்ற அலுவலகம்‌ மற்றும்‌ அரசு அலுவலகங்களில்‌ வழங்கும்‌ மாணவர்களுக்கு சான்றிதழ்கள்‌ வழங்கப்படும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியரின்‌
பொற்கரங்களால்‌ திருமங்கலம்‌ இல்லம்‌ தேடிக்கல்வி மைய மாணவர்கள்‌ டி.அகிலேஷ்‌, எஸ்‌.சூர்யா ஆகியோர்களுக்கு பாராட்டூச்சான்றிதழ்‌ வழங்கப்பட்டது.

முகநூல்‌ வழியாக கற்றல்‌, கற்பித்தல்‌ உபகரணங்களைக்‌ காட்சிப்படுத்தியதன்‌ மூலம்‌ இல்லம்‌ தேடிக்கல்வி சிறப்புப்பணி அலுவலர்‌ அவர்களால்‌, தேர்வு செய்யப்பட்டு சென்னையில்‌ நடைபெற்ற புத்தகக்‌ கண்காட்சியில்‌ அரங்கத்தை அலங்கரித்த தன்னார்வலர்கள்‌ செல்வி.நல்லம்மாள்‌, அலங்காநல்லூர்‌ மற்றும்‌ செல்வி.நாகஸ்ரீ பிரீதி, திருமங்கலம்‌ ஆகியோருக்கு பாராட்டூச்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டது.

மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ திரு.குருநாதன்‌ அவர்கள்‌ நன்றியுரை வழங்கினார்‌. இதர கல்வித்துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட இல்லம்‌ தேடிக்கல்விக்குழு உறுப்பினர்கள்‌ பங்கேற்றனர்‌.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: