வல்லனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா | சிவகங்கை கலெக்டர் பரிசளிப்பு
Vallani Panchayat Union Primary School Annual Festival | Sivagangai Collector Award

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வல்லனியில், நடைபெற்ற ஆண்டுவிழாவில், மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, பங்கேற்று, மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக் கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, மாணவ, மாணவியர்களின் நலனை பாதுகாத்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தேவைக்கேற்ப மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளியில், பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமன்றி, சமூக சிந்தனையுடனும் செயலாற்றி, பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வருகின்றனர்.
குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கக்கூடிய கற்பித்தலுக்கான உபகரணங்கள் அனைத்தும், தனியார் பள்ளிக்கு இணையாக இப்பள்ளியில் உள்ளது. இப்பள்ளியில், பயின்று மாணவ, மாணவியர்கள் புரிந்து படிக்கக்கூடிய திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று பள்ளி வாயிலாக எடுத்துரைத்தனர்.
இம்மாணாக்கர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி வரும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஆகியோருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணாக்கர்கள் மற்றும் மாணாக்கர்களின் பெற்றோர்கள் ஆகியோர்களை ஊக்கப் படுத்துவதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிககள் நடைபெறுகிறது.
குழந்தைகளாகிய நீங்கள் நன்றாகப் படித்து, இனிவரும் காலங்களில் ,உயர்ந்த நிலையை அடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, பள்ளி மாணாக்கர்களின் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர், கண்டுகளித்து, மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் கோ.முத்துச்சாமி, வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியோர் எஸ்.புவனேஸ்வரி, ஆசிரியை மாலதி மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.