வரும் 24ந் தேதி மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Grievance meeting of gas consumers in Madurai on 24th

மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24.08.2022-ஆம் தேதியன்று பிற்பகல் 3.00 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள்,பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அசோசியேசன், எரிவாயு நுகர்வோர்கள், ஆயில் மார்கெட்டிங் கம்பெனி நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றினை தடுப்பதற்காக முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், சமூக இடைவெளி (8௦0181 1915/2006) கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.