செய்திகள்மாநகராட்சி

மாநகராட்சியின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்குபொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் ஆணையாளர் ச.விசாகன், தகவல்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளும், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சியில் 01.04.2011 முதல் திருத்தி விதிக்கப்பட்ட வரி தமிழக அரசின் உத்தரவின்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் பொது சீராய்வில் உயர்த்தப்பட்ட வரியும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வரி உயர்வுக்கு முன் செலுத்திய பழைய வரியை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் வரி செலுத்தியிருந்தால் வரும் காலங்களில் வரவு வைக்கப்படும்.

எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம் மற்றும் காலிமனை வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் அடிப்படை வளர்ச்சிப் திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறும், மேலும் மார்ச் மாதங்கள் முழுவதும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும், கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும்.

எனவே பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையாளர் ச.விசாகன், கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

nine − seven =

Related Articles

Close