அமைச்சர்செய்திகள்

வரிச்சியூர் ஊராட்சியில் புறக்காவல் நிலையம் | அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார்

Outpost in Varicchiur Panchayat | Minister P. Murthy opened it

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பாயியூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வரிச்சியூர் ஊராட்சியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா (16.05.2022) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமை வகித்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் தமிழக வணிகவரி பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி புறக்காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா, ஊராட்சித் தலைவி முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை அடுத்து, வரிச்சூர் கிராமத்தில் புதிய திட்டத்திற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: