ஆன்மீகம்

வரலாறு பேசும் ஆயர்தேசம் (தமிழ்நாடு)

Aayar Desam (Thamilnadu)

மொழிக்காக உருவாக்கப்பட்ட முதல் சங்கமான தமிழ்சங்கத்தின் தலைவர் அகத்தியர். தமிழ்மொழியின் முதல்நூல் அகத்தியம், அகத்தியரால் இயற்றப்பட்டது.

அஷ்டாமாசித்திகளை பெற்றவர்;
18சித்தர்களில் தலைமை சித்தர்;

தற்காப்புகலைகளின் தாய் கலையான வர்மக்கலையின் ஆசான்;சித்த மருத்துவம் வானியல், ஜோதிடம்,போர்க்கலைகளின் தந்தை; சிவனால் அருளப் பெற்ற கலைகளை தம்மைச் சார்ந்து உள்ள ஆயர்கள் அனைவருக்கும் அருளியவர் அகத்தியர்.

கடல்கொண்ட துவாரகாவில் இருந்து மீண்ட யதுகுலத்தினரை (யாதவகுலம்) தென்பாரதம் நோக்கி அழைத்து வந்தவர் அகத்தியர். துவாரகா-வில் இருந்து சித்தர் அகஸ்தியர் தலைமையில் தென்பாரதம் வந்த யாதவர்கள், வேளிர் (Velir) என அழைக்கப்பட்டனர்.

வேளிர் மன்னர்கள் தங்கள் பெயரோடு வேள்ஆய்(VelAay),ஆய்வேள்(AayVel) என பயன்படுத்தி கொண்டனர்.பிற்காலத்தில் ஆயர் என்ற அடையாளத்தோடு நிலை பெற்றனர்.

“பொருநைநதி என அழைக்கப்பட்ட தாமிரபரணி புகழ்பெற்ற பொதிகைமலையில் அகத்தியரால் தோன்றியது”

பொதிகைமலையில் எழுந்தருளிய அகத்தியர்,ஆயர்களுக்கு சித்தமருத்துவம்,வானியல்,போர்க்கலைகள், ஆயுதப்பயிற்சி, தற்காப்புக்கலை என பல ஞானங்கள் கற்பித்து வலிமை படைத்த ஆயர்களை மேலும் வல்லமை படைத்தவரர்களாக உருவாக்கினார்.

ஆயர்களின் போர்த்திறனும், வீரமும் அரசை நிர்மாணித்தது.ஆநிரை காத்து காட்டை நாடாக்கி ஆண்டதால் “கோன்” என அழைக்கப்பட்டனர், ஆயர்கள்.

அரசன் என பொருள்படும் “கோன்;கோனார்” எனும் சொல் ஆயர்குலத்துக்கு மட்டுமே உரித்தானது.ஆயர்களின் மாடுமேய்க்கும் கோல்;அரசனான பின்பு ஆயர்களின் செங்கோல் ஆனது.

செங்கோல் (SengKol /Sceptre) ஏந்தியவாறு வீற்றிருக்கும் அரசர் கருப்பணகோனார்(King KaruppanaKonar) சிலை.

ஆய்வேளிர் (Aayvelir) அரசர்களில் சிறப்பு பெற்ற சிலர்:
முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் வேள்பாரி (Velpaari)
ஆய்அண்டிரன் (AayAndiran)
வையாவிக்கோப்பெரும்பேகன் (VaiyaaviKoperumbaygan)
அழுந்தூர்வேள் (AlunthurVel)
நாங்கூர்வேள் (NangkurVel)
இருங்கோவேள் (ErungKovel)
நன்னன்ஆய் (NannanAay)
அழும்பில்வேள் (AlumbilVel)
வேள்எவ்வி (Velevvi)
எழினி (Yelini)
எருமையூரன் (Erumaiyuraan)
நெடுவேள்ஆவிக்கோமான் (NeduVelAaviKomaan)
நெடுவேள்ஆதன் (NeduVelAadhan)
நெடுங்கைவேண்மான் (NedungkaiVenmaan)
செல்லிக்கோமான்ஆதன்எழினி (SelliKomaanAadhanYelini)
வேள்ஆவிகோமான்பதுமன் (VelAaviKomaanpathuman)
பொதியிற்செல்வன்திதியன் (PothiyirselvanThithiyan)
வாட்டாற்றுஎழினியாதன் (VaataatruYeliniYaadhan)


ஆதன் (Aadhan), யாதன் (Yaadhan) என்னும் சொல் பசுக்களை உடைய ஆயர்-யும் (Aayar), விண்ணையும்,காற்றையும் குறிக்கும்.சேரமன்னர்களும்,ஆய்வேளிர் மன்னர்களும் தங்கள் பெயரோடு ஆதன் என்று சேர்த்துக் கொண்டனர்.

கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பொ.மு.6-ம் நூற்றாண்டை சேர்ந்த “ஆதன்” என்று குறிப்பிடப்பட்ட பானையோடுகள் கிடைத்துள்ளன.

ஆய்அண்டிரன்:பொதிகை மலையின் யானை மந்தைகளை போர்க்களிறுகளாக மாற்றுவதில் வல்லமை மிக்கவர்.செல்வ வளங்களை பெருக்கி என்றும் நிலைக்கச்செய்யும் நீல நிற நாகத்தின் ஆடையினை இறைவன் சிவனுக்கு அர்ப்பணித்தவர்.ஆய்அண்டிரன் படைத்திறன் கண்டு எதிர்க்க அஞ்சி நிலைகுலைந்த படைகள் ஏராளம்.ஆய்அண்டிரன் மீது போர்தொடுத்த படைகள், எதிர்த்து தோல்வியுற்ற வீரர்கள் விட்டுச்சென்ற ஆயுதங்களை குவித்துவைத்திருப்பது ஒரு பெரிய மலைபோல் காட்சியளிக்கும்.

வையாவிக்கோப்பெரும்பேகன்:

கலிங்கம் கொடுத்து மயிலின் குளிர்நீத்த பழநி என்னும் திருஆவினன்குடியை ஆட்சி செய்த ஆய்வேளிர் அரசன் வையாவிக்கோப்பெரும்பேகன்

முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் வேள்பாரி

ஆயர்குல அரசர்களான சேரமன்னர்கள் சூடுகின்ற பூ “பனம்பூ”.ஶ்ரீ கிருஷ்ணரின் அண்ணன் பலராமரின் கொடி பனைகொடி.

நறுகுளங்கரா ஶ்ரீ பலராமர் திருக்கோயில்,திருச்சூர்,நென்மேனி பலராமர் கோயில்,திருகுன்றபுழா பலராமசுவாமி கோயில்,பூத்ரகோயில் பலராமர் கோயில்,காரியோடு பலராம சுவாமி கோயில் போன்ற பலராமர் கோயிலும்,வழிபாடும் கேரளாவில் இன்றும் காண முடிகிறது.

 

கரிகாலசோழன்

சோழமன்னர்களின் முன்னோடி,பெரிதும் போற்றப்பட்ட சோழசாம்ராஜ்ஜியத்தை நிலைக்க செய்த கரிகாலசோழன் அழுந்தூர்வேள் பேரன் ஆவார் மற்றும் நாங்கூர்வேள் மகளை கரிகாலசோழன் திருமணம் செய்து கொண்டார்.

சோழமன்னர்கள் சில பட்டயங்களில் தங்களை ஶ்ரீ ராமரின் வழிவந்தவர்கள் என்று சொல்லுவதுண்டு.அதற்கான காரணம் என்னவென்றால், ஶ்ரீ ராமரின் (Sree Ramar) முன்னோரான மன்னர் மாந்தாத்ரி (Mandhatri), யாதவஅரசரான ஷஷபிந்து-வின் மகள் (Daughter Of YadavarKing Shashabindhu) பிந்துமதிசைத்ரரதி-யை(BindhumathiChaitrarathi) திருமணம் செய்து கொண்டார்.இத்தம்பதிக்கு புருகுத்சா (Purukuthsa), அம்பரீஷா(Ambarisha),முச்குந்தா(Muchkundha) என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.

இதில் புருகுத்சா அயோத்யா-வின்(Ayodhya) மன்னரானார்.பிற்காலத்தில்,புருகுத்சா-வின் வம்சத்தில் வந்த அயோத்யா-வின் 60-வது மன்னர் அஜா(60th AyodhyaKing Aja) விதர்ப்பதேசத்து யாதவஇளவரசியான இந்துமதி-யை(VidharbhaKingdom YadavarPrincess Indhumathi) திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு பிறந்தவர்தான் ஶ்ரீ ராமரின் தந்தையான தசரதன்(Dhasarathan).தசரதனின் மனைவி கௌஷல்யா-வின்(Kaushalya) மூத்தசகோதரி(ElderSister) வெர்ஷினி-யை(Vershini) அங்கதேசத்து யாதவஅரசர் ரோமபாதர்(AngaKingdom YadavarKing Romapadhar/Lomapadhar) திருமணம் செய்திருந்தார்.இவர்கள் தசரதன்-கௌஷல்யா தம்பதிக்கு பிறந்த பெண்குழந்தை சாந்தா-வை(Shantha,Eldersister Of SreeRamar) தத்தெடுத்துக் கொண்டனர்.

மேலும்,அகத்தியரின்(Agathiyar) மனைவி லோபமுத்ரா(Lopamudra),ஶ்ரீ கிருஷ்ணரின்(Sree Krishnar) மனைவி ருக்மணி(Rukmani) போன்றவர்களும் விதர்ப்பதேசத்து யாதவஇளவரசிகளாவர்.

பிற்காலத்தில்,அங்கதேசத்தை(AngaKingdom) யாதவிகுந்தி-யின்(YadaviKunthi) புதல்வன் கர்ணன் (Karnan) ஆட்சி செய்தார். ராமாயணகாலத்திற்கு முன்பாகவே சூரியவம்சம்(Suryavamsam) சந்திரவம்சத்தில்(Chandravamsam) ஐக்கியமாகி யாதவகுலம்(Yadavakulam) மேலும் பிரகாசம் அடைந்தது.

தமிழில் ஐம்பெரும்காப்பியங்களில்(ThamilLiterature) முதலாவதாக விளங்கும் சேரஇளவரசர் இயற்றிய சிலப்பதிகாரம்(Silapadhikaram) மதுரைக்காண்டத்தில்(Maduraikandam) ஆயர்கள்(Aayars) ஶ்ரீ கிருஷ்ணரை(Sree Krishnar) போல ஶ்ரீ ராமரையும்(Sree Ramar) போற்றி வழிபடுகின்றனர்.

பல்லவமன்னர் நரசிம்மவர்மன் (PallavaKing Narasimmavarman) கட்டிய திருஅல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் (ThiruAllikeni Parthasarathy Koyil) ஶ்ரீ கிருஷ்ணர்(SreeKrishnar) தன் மனைவி ருக்மணி (Rukmani), அண்ணன் பலராமர் (Balaramar), தம்பி சாத்யகி (Sathyaki), மகன் பிரத்யும்னன் (Pradhyumnan),பேரன் அநிருத்தன் (Aniruddhan) என தனது குடும்பத்தினரோடு காட்சி தருகிறார். இந்த பார்த்தசாரதி விக்ரஹம் (Parthasarathy Vigraham) அகத்தியமுனியால் (Agathiyar) பிரிதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மதுரை கா.ராஜேஷ்கண்ணா

விடுபட்ட, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்று தேடல்கள் நெடும் பயணம் என்றபோதும், அதை தொடர்ந்து செய்து வருகின்றேன். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கம். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: