
மதுரை மாநகராட்சி அண்ணாநகர் – வண்டியூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவையை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆகியோர் (19.08.2022) தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் மரு.செல்வவிநாயகம், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின்படி பல்வேறு திட்டங்கள் மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சட்டமன்றத்தின் மான்யக் கோரிக்கை எண்.19 அறிவிப்பு எண்.49ன் படி தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவை மையம் விரிவுபடுத்தப்பட்டது.
இன்று வண்டியூர் நகர்ப்;புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மருத்துவ சேவையின்படி சிறப்பு மருத்துவர்கள் திங்கள் முதல் சனி வரை மாலை 4.30 மணி முதல் 8.30 வரை சிகிச்சை அளிப்பார்கள். (திங்கட்கிழமை – பொது மருத்துவம், செவ்வாய்க்கிழமை மகப்பேறு மருத்துவம்.
மற்றும் புதன் கிழமை – குழந்தைகள் நல மருத்துவம், வியாழக் கிழமை – கண் மற்றும் முடக்கவியல் மருத்துவம், வெள்ளிக் கிழமை – தோல்நோய் மற்றும் பல் மருத்துவம், சனிக்கிழமை – மனநல மருத்துவம் ஆகிய மருத்துவ பரிசோதனைகள் பார்க்கப்படும்) தமிழகத்தில் உள்ள அனைத்து பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவை மூலமாக 9 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைவார்கள்.
கண் மருத்துவ பரிசோதனையை மதுரையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் டாக்டர் நைனார் கண் மருத்துவமனையின் கண் சிறப்பு மருத்துவர் டாக்டர் சி.ராம் லிங்கேஷ்வரன் M.B.B.S., D.O., நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யும் காட்சி.
தமிழக முதல்வர் தமிழக மக்கள் நலன் கருதி எண்ணற்ற திட்டங்களை ஏற்படுத்தி தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடாந்து முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைத்த மதுரை அண்ணா நகர் உழவர் சந்தை தூய்மை சந்தையாக தேர்வு செய்யப்பட்டு தூய்மைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது இவ்விருதினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மதுரை வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அவர்களிடம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, வாசுகி, உதவி ஆணையாளர் அமிர்தலிங்கம், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மருத்துவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற கண் மருத்துவ பரிசோதனையை மதுரையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் டாக்டர் நைனார் கண் மருத்துவமனையின் கண் சிறப்பு மருத்துவர் டாக்டர் சி.ராம் லிங்கேஷ்வரன் M.B.B.S., D.O., பொருப்பாளாராக இருந்து, நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்தார்.