செய்திகள்மாநகராட்சி

வண்டியூர் கண்மாயில் மறுசீரமைப்பு நிர்வாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திடீர் ஆய்வு

மதுரை வண்டியூர் கண்மாயில் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய்,தலைமையில் ஆணையாளர் ச.விசாகன், முன்னிலையில் தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு நிர்வாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.சத்யகோபால்(ஓய்வு), இன்று (03.03.2020) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய மற்றும் மாநில திட்டங்கள் மூலம் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றினையும், வண்டியூர் கண்மாயினையும் புனரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள ஆலோசனையின்படி வண்டியூர் கண்மாயில் தண்ணீர்வரத்தை உயர்த்துவது தொடர்பாகவும், வரத்து கால்வாய்களை மேம்படுத்துவது தொடர்பாகவும், கழிவுநீர் கலக்காமல் தடுப்பது தொடர்பாகவும், கண்மாயின் கரையின் அகலம் மற்றும் உயரத்தின் அளவு குறித்தும் அளந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் கண்மாயில் குடிமராமத்து பணியின் கீழ் ஏற்கனவே மேற்கொள்ளப் பட்டுள்ள குடிநீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் ஏனைய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய், ஆணையாளர் ச.விசாகன், நகரப் பொறியாளர் அரசு, கண்காணிப்பு பொறியாளர் (பொதுப்பணித்துறை)சுகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி ஆணையாளர் பிரேம்குமார், உதவி செயற்பொறியாளர் மனோகரன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

eleven + 3 =

Related Articles

Close