வணிகர்களை சந்தித்து ஆதரவு: மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன்
Meet the traders and support: DMK candidate for Madurai Central Assembly constituency Palanivel Thiagarajan

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகப் பெருமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் அப்போது பேசிய அவர் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தம்முடைய வாக்குறுதியாக மூன்று முக்கிய பணிகளை பட்டியலிட்டார்.
மதுரை நகரின் முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது முதல் பணியாக இருக்கும் அரசு தந்த தகவலின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் மதுரைக்கு தேவையான குடிநீர் இருக்கிறது ஆனால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு வைகை அணையிலிருந்து மதுரைக்கும் இடையில் தண்ணீர் திருட்டு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது இதன் பின்னணியில் ஒரு மாபியா கும்பல் செயல்படுகிறது.
இதுபற்றி 2016ஆம் ஆண்டு விரிவாக ஆராய்ந்து புள்ளிவிவரங்களுடன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சில நடவடிக்கை எடுத்தார் அதனால் தண்ணீர் திருட்டு தற்காலிகமாக இல்லாமல் இருந்தது ஆனால் மீண்டும் அவரது மறைவிற்குப் பிறகு ஏகபோகமாக அந்த பகுதிகளில் தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது இதனால் மதுரையில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது .
கடந்த ஐந்தாண்டு காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாக ஆட்சியில் இருப்பவர்கள் கூறுகிறார்கள் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தண்ணீர் திருட்டை முழுமையாக தடுத்து நிறுத்துவதோடு
24 மணி நேரமும் மதுரை மக்கள் தன்னிறைவு பெறும் வகையில் தண்ணீர் கிடைத்திடும் வகையில் தண்ணீர் மதுரைக்கு கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன் என கூறினார்.
இரண்டாவது வாக்குறுதியாக மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் திருப்பணிகள் நீண்டகாலமாக நடைபெறாமல் உள்ளது குறிப்பாக தீ விபத்து குறித்து நான் பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டு இருந்தேன் ஆனாலும் அதுகுறித்த சீரமைப்பு பணிகள் முழுமையான நடைபெறாது இருப்பது வேதனை அளிக்கிறது திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி கோவில் திருப்பணிக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அப்படி ஒதுக்கப்படும் போது முதல் பணியாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் திருப்பணியை நடத்திட நடவடிக்கை எடுப்பதோடு தலைவரின் அனுமதியைப் பெற்று நானே அந்த குழுவின் தலைவராக இருந்து திருப்பணியைச் செய்து முடிப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன்.
மூன்றாவது வாக்குறுதியாக மதுரையில் முழுமையாக செயல்படுத்த படாத பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கடந்த திமுக ஆட்சிக் காலத்தின்போது அம்ருட் திட்டத்தின் மூலம் 400 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றது ஆனால் இரண்டு ஆண்டு காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த பணிகள் முழுமையாக நடைபெறவில்லை மூன்று முறை இதற்கான டெண்டர் விடப்பட்டு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
எனவே திமுக ஆட்சி அமைந்த பிறகு மாநில அரசின் நேரடி உரிமைகளை தாண்டி உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கிற வகைகள் உள்ளாட்சித் தேர்தலையும் முறையாக நடத்தி வார்டுகள் அனைத்திற்கும் கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மதுரை மஞ்சப்புத்தூர் ஆயிரவைசிய மகாஜன சபை சங்கத்தைச் சார்ந்த தலைவர் பாஸ்கரன் மற்றும் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர் மேலும் மதுரை ஜுவல்லர்ஸ் மற்றும் பு ல்லியன் மெர்ச்சன் ட்ஸ் அசோசியேசன் சார்பில் தலைவர் தட்சிணாமூர்த்தி செயலாளர் லோகநாதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் இருந்தனர் தொடர்ந்து மதுரை வளையல்காரத் தெரு வர்த்தகர்கள் சங்கத்தினர் தலைவர் லாஜி ,செயலாளர் எம் டி அருண்,பொருளாளர் அரவிந்த் ஜெயின் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார்.