
வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரமடைந்த நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு சார்பாக முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இந்த ஒத்திகை பயிற்சியானது மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தெப்பத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை டவுன் தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய மற்றும் நிலைய அலுவலர்கள் பணியாளர்கள் ஒன்றிணைந்து ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூவமாக நிகழ்ந்தது.
முக்கியமாக இந்நிகழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி ? எவ்வாறு தண்ணீரில் இருந்து தப்பிப்பது ? என்கிற முறைகள் மிக தெளிவாக விளக்கப்பட்டது. அதேபோல் ரப்பர் படகு மூலம் மீட்கும் பயிற்சியும் நடைபெற்றது.
மதுரையின் மையப்பகுதியான தெப்பகுளத்தில் இந்த விழிப்புணர்வு பயிற்சியை பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கவனித்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஆபத்தான நேரங்களில் முதலில் தைரியமாக செயல்படும் முறைகள் குறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.