செய்திகள்புகார்

வடகாடுபட்டி கிராமத்தில் முறையாக சாக்கடை வசதி செய்து தராத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

Public protests in Vadagadupatti village against the authorities for not providing proper drainage facilities

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் ,வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள பெரியார் நகரில் தற்போது, நெடுஞ்சாலை துறை சார்பில் சாக்கடை நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. அது முறைகேடாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் உள்ளதாக, இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இந்த பகுதி பெரியார் நகர் பொதுமக்கள் கூறியதாவது: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில், சாலையின் ஒரு புறம் மட்டும் கழிவு நீர் கால்வாய் அமைத்து மற்றொரு புறம் அமைக்காதால், பெரியார் நகர் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

மேலும், பாலம் அமைக்கும் பணிகள் ஆமை மேகத்தில் நடைபெறுவதால், மதுரையிலிருந்து விக்கிரமங்கலம் வழியாக செல்லும் பேருந்துகள் செக்கானூரணி அருகே உள்ள பன்னியான் சுற்றி விக்கிரமங்கலம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும், காலை வேலை என, இரு வேலைகளில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், இப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நேரடியாக தலையிட்டு, பெரியார் நகர் பகுதியில் இருபுறமும் சாக்கடை அமைத்து கழிவு நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியார் நகர் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: