
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வசந்த நகர் ஆண்டாள்புரம், திருப்பரங்குன்றம் சாலையில் கரூர் வைசியா பேங்க் அருகே மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் குடிநீர் குழாய் பல மாதங்களாக உடைந்து சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பலமுறை அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், குடிநீரானது அப்பகுதியில் செல்லும்பொழுது கழிவுநீர் போல் செல்வதாகவும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக குற்றச்சாட்டுகின்றனர்.
மேலும் பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் சொல்லியும், அப்பகுதி கவுன்சிலர்களிடம் சொல்லியும் எவ்வித நடவடிக்கையை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் மற்றும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளோ இதை கொஞ்சம் கண்டு கொண்டால் குடிநீர் பஞ்சம் வராமல், நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்றலாமே நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயினை பழுதுபார்த்து சாலையில் கசித்து வீணாகப் போகும் நீரினை தடுக்க முன்வர வேண்டும்.