
Institute of Banking Personnel Selection (IBPS) தேர்வாணையத்தால் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வங்கி எழுத்தர் CRP Clerks – XII காலிப்பணியிடத்திற்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளது.
இதில் தமிழகத்திலுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு 33 காலிப்பணியிடங்களும், போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் காயமுற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமும் தகுதியும் உடைய முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் www.ibps.in என்ற இணையதள முகவரியில்
21.07.2022-க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1