செய்திகள்

லிப்ட் கொடுக்காத ஆத்திரத்தில் மதுரை பைபாஸ் மேம்பாலத்தில் கற்களை வீசி எறிந்த முதியவர்

An old man threw stones at Madurai Bypass flyover in anger over not being given a lift.

மதுரை பைபாஸ் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து செல்ல சிரமமாக இருப்பதாக அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களிடம் பலமுறை லிப்ட் கேட்டு முயற்சித்துள்ளார்.

இதில் தோல்வியுற்ற முதியவர் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலையில் ஓரத்தில் இருந்த கற்களை சாலையில் நடுவில் தூக்கி வீசி உள்ளார்.

இதனை கண்டு சமூக ஆர்வலர் ஒருவரும் மற்றும் வாகன ஓட்டிகள் அவரிடம் கேட்டபோது; தனக்கு யாரும் லிப்ட் கொடுக்கவில்லை என்பதால் இவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார். இதனை அடுத்து வாகன ஓட்டிகள் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதைப் போன்ற சம்பவம் கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருப்பரங்குன்றத்தில் தனக்கு லிப்ட் கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர் பெரிய கல்லை சாலையின் நடுவே வைத்ததில், அதில் மோதிய இருசக்கர வாகன ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: