செய்திகள்

ரெப்போ வங்கி வட்டி விகிதம் உயர்வு எதிரொலி | வீட்டு, வாகன கடன் வட்டி உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

Repo Bank Interest Rate Hike Echo | Public shocked by increase in home and car loan interest

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ (Repo) விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தியதற்கு மறுநாளே பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தியதற்கு மறுநாளே பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. கடந்த மே மாதம் 4ம் தேதி அன்று, வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் அதிகரிப்பதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இதன் மூலம் ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்ந்தது.

இந்நிலையில் மீண்டும் ஜூன் 7ம் தேதி அன்று இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. அன்றைய தினம் மும்பையில் நடைபெற்ற நிதிக் கொள்ளைக் குழு கூட்டத்தில் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் தாறுமாறாக உயரும் நிலை உருவானது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்த மறுநாளே பல வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகிய வங்கிகளில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்…

1. ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank):

ஐசிஐசிஐ வங்கி தனது இணையதளத்தில் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகித கொள்கை அறிவிப்பின் படி, வெளிப்புற அளவுகோல்களின் அடிப்படையில் வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்தை (EBLR )அடிப்படையாக கொண்டு ஆண்டுக்கு 8.60 சதவீதம் என 2022, ஜூன் 8ம் தேதி முதல் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் கடந்த மே மாதம் 4ம் தேதி முதல் 8.10 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் ஜூன் 80 தேதி முதல் 8.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2. பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda):

Baroda Repo Linked Lending Rate (BRLLR) உடன் இணைக்கப்பட்ட பல்வேறு கடன்களுக்கான பேங்க் ஆஃப் பரோடாவின் வட்டி விகிதம் ஜூன் 9ம் தேதி வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா வங்கி இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி, “சில்லறை கடன்களுக்கான BRLLR 7.40 சதவீதமாக ஜூன் 9ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தற்போதைய ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதம் மற்றும் அடிப்படை புள்ளிகள் 2.50 சதவீதம் ஆகும்.

3. பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank):

ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட் (RLLR) உடன் இணைக்கப்பட்டுள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியின் அனைத்து கடனுக்கான வட்டி விகிதமும் ஜூன் 9, 2022 முதல் 7.40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4. பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India):

பேங்க் ஆஃப் இந்தியாவும் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, திருத்தப்பட்ட ரெப்போ விகிதத்தின்படி, பேங்க ஆஃப் இந்தியா வங்கியின் கடனுக்கான வட்டி விகிதம் ஜூன் 8, 2022 முதல் 7.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

EMI எவ்வளவு அதிகரிக்கும்?

தற்போதைய உயர்வுக்குப் பிறகு, ரெப்போ விகிதம் 0.9% ஆக உள்ளது. மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு காரணமாக, வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் போன்ற கடன் வழங்குபவர்கள் தங்கள் கடன் விகிதங்களை அதற்கேற்ப அதிகரித்துள்ளனர். இதன் விளைவாக உங்கள் EMI தொகையும் அதற்கேற்ப உயர்ந்துள்ளது.

உதாரணத்திற்கு உங்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் 20 ஆண்டுக்கான 30 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் நிலுவையில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். தற்போது உங்கள் மாத தவணைத் தொகை ஒரு லட்சத்திற்கு 1,648 ரூபாய் அதிகரித்து ரூ.23,259ல் இருந்து ரூ.24,907 ஆக உயரக்கூடும்.

இனி ரெப்கோ வட்டி விகிதம் உயருமா ?

பணவீக்கம் மற்றும் பொருளாதார சிக்கல்களை தவிர்க்கும் விதமாக அடுத்தடுத்து இரண்டு முறை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ஆனால் பணவீக்கத்திற்கான காரணிகள் குறையாததால் இந்த விரைவான வட்டி விகித உயர்வுகள் இறுதி முடிவாக இருக்க வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் & டெப்ட் இன்வெஸ்ட்மென்ட் சர்ச்சில் பட். கூறுகையில், “இப்போதைக்கு பணவீக்கத்தின் உச்சத்தை நாம் பார்த்திருக்கலாம், ஆனால் பண வீக்கம் குறையும் வரை அதன் முடிவை நம்மால் பார்க்க முடியாது” என எச்சரித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: