செய்திகள்

ரூ.6771.79 இலட்சம் மதிப்பீட்டில் 7,469 பணிகள்: மதுரை கலெக்டர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அய்வு

7,469 works valued at Rs. 6771.79 lakhs: Madurai Collector Maru S. Aneesh Sehgar

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் (01.02.2022) கலெக்டர் மரு.எஸ்.அனீஷ் சேகர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் .

குறிப்பாக, கே.சென்னம்பட்டி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் தூர்வாறும் பணிகளையும், ஓடைப்பட்டி கிராமத்தில் பெருவாரியாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகளையும், கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மராமத்துப் பணிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டு மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில்:-

ஊரக பகுதிகளில் உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலை வாய்ப்பினை அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, ஊராட்சி அளவில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது.

இத்திட்டத்தின் கீழ்,கிராம ஊராட்சிகளுக்கான கட்டடங்கள் கட்டுதல்,மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கட்டடங்கள் கட்டுதல்,அங்கன்வாடி மையங்கள்,உணவு தானிய இருப்பு கிட்டங்கி அமைப்புகளை கட்டுதல், விளையாட்டு திடல்கள் அமைத்தல்,கிராம சந்தைகள் அமைத்தல் மற்றும் பள்ளி கழிப்பிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு பொது உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல, பண்ணைக் குட்டைகள் அமைத்தல், நீராதாரக் குளங்களில் உள்ள மதகு மற்றும் மறுகால் சீரமைத்தல் உள்ளிட்ட நில மேம்பாடு மற்றும் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும் இத்திட்ட விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு கிராம சபையில் தீர்மானம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 420 ஊராட்சிகளில்ஜீன்-2022 முதல் இதுவரை மொத்தம் ரூ.6771.79 இலட்சம் மதிப்பீட்டில் 7469 பணிகள் தேர்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதேபோல, ஊரக பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரித்திடும் நோக்கில்ரூ.223.42 இலட்சம் மதிப்பீட்டில் 2,16,040 மரக்கன்றுகள் நடவு செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

குறிப்பாக, ரூபாய் 1202.53 இலட்சம் மதிப்பீட்டில் 209 சிமெண்ட் சாலை பணிகள், ரூபாய் 753.71 இலட்சம் மதிப்பீட்டில் 118 பேவர் பிளாக் சாலை பணிகள், ரூபாய் 372.71 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்களில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான 46 பணிகள், ரூபாய் 800.85 இலட்சம் மதிப்பீட்டில் 155 தடுப்பணைகட்டும் பணிகள், ரூபாய் 168.11 இலட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்கும் 5 பணிகள், ரூபாய் 541.26 இலட்சம் மதிப்பீட்டில் 5820 உறிஞ்சு குழிகள் (Soak Pit) உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மதுரை கலெக்டர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: