கலெக்டர்செய்திகள்

ரூ.1295.76 கோடி மதிப்பீட்டில் மதுரையில் 100 வார்டு பகுதிகளுக்கு முல்லை பெரியார் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் ஆய்வு

Inspection of the works of constructing Mullai Periyar drinking water pipes for 100 ward areas in Madurai at an estimated cost of Rs.1295.76 crore.

மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, ஆகியோர் இன்று (16.07.2022) ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை வடகரை பகுதிகக்கு ரூ.291.37 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் மண்டலம் 1 வார்டு எண்.10 சம்பக்குளம் 120 அடி சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக மெயின் குழாய்கள் பதித்தல், குழாய்கள் மூலம் கழிவுநீர் தொட்டிக்கு இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும், அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1295.76 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியார் அணையில் இருந்து மதுரை மாநகராட்சியில் 100 வார்டு பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்கு குழாய்கள் மற்றும் மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்கீழ் கே.கே.நகர் பகுதியில் 12 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டியினையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் மற்றும் அதன் அருகில் ரூ.112.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேரங்காடி கட்டுமான பணியினையும், மீனாட்சியம்மன் கோவில் அருகில் ரூ.40.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணியினையும் என மதுரை மாநகராட்சியின் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து அறிஞர் அண்ணா மாளிகை ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கு கூடத்தில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் குறித்தும், மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்குதல், சாலைகள் அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், மாநகராட்;சி பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை முறையாக அகற்றுதல், வரி வசூல் பணிகள், வரைபட மற்றும் கட்டிட அனுமதி, 24ஒ7 மக்கள் குறைதீர்க்கும் பிரிவு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், நகரப்பொறியாளர் லெட்சுமணன், கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன். மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர்கள், அமிர்தலிங்கம், சுரேஷ்குமார், மனோகரன், சையத் முஸ்தபாகமால், சேகர், செயற்பொறியாளர் (திட்டம்) அலாவுதீன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: