செய்திகள்

ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உயிருக்கு போராடிய ஆஸ்திரேலிய பறவையை காப்பாற்றிய செய்தியாளர்

The journalist who saved the Australian bird that was fighting for its life on the Rameswaram Madurai National Highway

ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட பறவை லெட்டர் விங்ட் கைட் (Letter winged knite) அழிந்து வரும் பறவை இனமான இப்பறவை பார்த்திபனூர் அருகே ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காயமுற்று பறக்க இயலாத நிலையில் சாலையின் நடுவே உயிருக்கு போராடி கிடந்துள்ளது.

அதிவேகமாக போக்குவரத்து நெரிசல் உள்ள இச்சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பறவையை அவ்வழியே சென்ற தனியார் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர் அடையாளம் கண்டு, பறவையை பாதுகாப்பாக மீட்டார். பின்னர் காயமுற்ற பறவைக்கு தண்ணீர் வழங்கி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பார்த்திபனூரில் இருந்து விரைந்து வந்த வன காவலர் பறவையை பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உலகில் அழிந்து வரும் பறவை இனமான இப்பறவையை உயிரை மீட்பதற்காக செய்தியாளருக்கு நன்றி தெரிவித்த காவலர், பறவைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அழிந்து வரும் பறவை இனத்தை போக்குவரத்து நெரிசல் மிக்க நெடுஞ்சாலையில் உயிரை துச்சமென நினைத்து பறவையைக் காப்பாற்றிய தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: