#ராஜபாயைம் #வேட்டைநாய் #நாட்டுநாய்
திரு.கணேசன் ஐயா அவர்களை வேறு ஒரு போட்டிக்காக சென்றபோது, அவரின் வேட்டை நாய் அனுபவம் குறித்து நண்பர் பிரசன்னா கூறியதன்பேரில், நேர்காணல் செய்ய முடிவு செய்தேன். அதேபோல் தோப்பிற்குச் செல்ல ஐயா அவர்களும் வந்துவிட்டார்.
திரு.கணேசன் ஐயா அவர்களைப் பற்றி கூற வேண்டும் என்றால், தென்னை மீன் அமிலம் குறித்து நமக்கு பேட்டியளித்த எஸ்.கே.சந்திரன் அவர்களின் பால்ய நண்பர். இவரும் அவரைப் போல் வயதை தாண்டிய இளைஞர். இந்த வயதிலும் தேனீயைப் போல் சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடையாமல் இல்லை.
எஸ்.கே.சந்திரன் அவர்களின் பேட்டி லிங்க் https://www.youtube.com/watch?v=IHa6E2jVuzk
அதையும் தாண்டி, அவரது குடும்பத்தில் பாரம்பரியமாக வேட்டை நாய் வளர்த்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்கையில் பல அரிய தகவல்கள் கிடைத்தது. இன்றைக்கு வேட்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால், அது குறித்து அதிகம் பதிவு செய்யவில்லை.
அதில் முக்கியமாக வேட்டை ராஜபாளையம் நாய்கள் அன்றைக்கு வேடடைக்கு பழக்கி வைத்திருப்பது குறித்து அவர் கூறியது ஆச்சர்யமான விசயமாக எனக்கு தோன்றினாலும், இது அந்த காலத்தில் இருந்த ஒன்று என்று மிகச் சாதராணமாக கூறினார் திரு.கணேசன் ஐயா.
வேட்டை என்பது பழக்கினால், எல்லா வகையான நாட்டு நாயும் வீரியமாக பாயும் என்பது இவரது நேர்காணல் மூலம் தெரிந்து கொண்டேன். முக்கியமாக கடலாடி பகுதியில் உள்ள மந்தை நாய்கள் குறித்தும் இதில் பதிவு செய்தள்ளார்.
பழையவை என்பது வெறும் நினைவுகள் மட்டுமல்ல அது வாழ்வின் அடையாளம் என்பதை நானும் உணர்ந்து அங்கிருந்து கிளம்பினேன். இதுபோல் நிறைய தகவல்களை நாம் பதிவு செய்ய வேண்டும் என்று. வேறு ஒரு பயணத்தில் எனது அனுபவத்தை பகிர்கின்றேன். நன்றி வணக்கம்.
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: https://play.google.com/store/apps/details?id=com.lone.anew&hl=en_IN&gl=US
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________