யோகாசனத்தில் உலக சாதனை நிகழ்த்திய மதுரை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
Appreciation ceremony for students of Madurai school who achieved world record in yoga

உலக யோகா தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மகாயோகம் மையத்தில், 415 மாணவர்கள் கலந்து கொண்ட உலக சாதனை நிகழ்வு நடந்தது. மாணவர்கள் சமகோணாசனத்தில் 1 மணி நேரம் 27 நிமிடங்கள் செய்து சாதனை படைத்தனர் மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்.
இந்த சாதனை உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் இந்த யோகாசனத்தை செய்துள்ளனர். இந்த மாணவர்கள் ஒரு மணி நேரம் 22 நிமிடம் செய்து சாதனை படைத்தனர்.
இந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று மதுரை வைகை வடகரை தியான இல்லத்தில் பாராட்டு விழா நடந்தது.
சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் ஜென்ஸ்கர் தற்காப்பு கலை பயிற்சியாளர் குப்பன், மகாயோகம் நிர்வாகிகள் ரமேஷ், லோகநாதன், ரவிசங்கர், என்ஜினியர் கணபதி, அப்துல் கலாம் விஷன்’ தலைவர் திருச்செந்தூரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.