
யானைக்கல் தரைப்பாலத்தில் 10 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்து 4 பேரை போலீசா கைது செய்தனர். விளக்குத்தூண் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் மோகன். இவர் யானைக்கல் தரைப்பாலத்தில் சந்தேகப்படும்படி நின்ற நான்கு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்.
அவர்களிடம் 10 செல்போன்கள் இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த செல்போன்கள் திருடியது என்று தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்து காக்கா தோப்பு தலைவிரிச்சான்சந்துவை சேர்ந்த கண்ணன் 40, சின்ன கண்மாயை சேர்ந்த பாலகுரு 31, ராமநாதபுரம் கடலடியை சேர்ந்த சுதாகர் 36, பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த முஸ்தபா மகன் சிராஜ்அலி 25 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1